சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப நிவாரணம் வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை

சுற்றுலாத் துறையை கட்டியெழுப்ப நிவாரணம் வழங்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை

நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை கட்டியெழுப்புவதற்கு நிவாரண உதவி வழங்குமாறு உலக வங்கியிடம் இலங்கை சுற்றுலா சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜௌபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள உலக வங்கி பிரதிநிதிகளுடன் விசேட சந்திப்பு நேற்று (31) உலக வங்கி காரியலயத்தில் நடைபெற்ற போதே அவர் இந்தக் கோரிக்கையினை முன்வைத்தார்.

இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் முதலீடு திட்டமிடல் மற்றும் ஊக்குவிப்புக்கான பிரதிநிதி ஐவன் எண்டன் நிமேக், உலக வங்கியின் தனியார் துறை விசேட ஆலோசகர் பிரியங்கா கெஹர், உலக வங்கியின் பொருளாதார நிபுணர் அமிலா, சுற்றுலா சம்மேளனத்தின தலைவர் ஏ.எம். ஜௌபர், விசேட ஆலோசகர் திஸ்ஸ ஜயவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது சுற்றுலாத் துறைறை கட்டியெழுப்பும் முகமாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.  கொவிட் 19 பாதிப்பு மற்றும் நாட்டின் தற்போதைய பொருளாதார பாதிப்பினால் சுற்றுலாத் துறை மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இத்துறையினை நம்பி வாழ்ந்த 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்று பாதிப்படைந்துள்ளதை கூட்டிக்காட்டிய ஜௌபர் பல்வேறு யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இதன்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள்: