பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு

பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க இலங்கை ஆதரவளிக்க வேண்டும்: குவைத் அழைப்பு
றிப்தி அலி
 
பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க அரபு நாடுகளின் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என  குவைத் அழைப்பு விடுத்துள்ளது.
 
சவூதி அரேபியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு குவைத்து தொடர்;ச்சியாக ஆதரவளித்து வருகின்றது என இலங்கைக்கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். பு தைர் தெரிவித்தார்.
 
இலங்கையும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என தூதுவர் தெரிவித்தார்.
 
குவைதின் 63ஆவது தேசிய தினம் மற்றும் 33ஆவது விடுதலை தினம் ஆகியவற்றின் நிகழ்வுகள் கடந்த கடந்த திங்கட்கிழமை (26) கொழும்பில் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே இலங்கைக்கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். பு தைர் இந்த அழைப்பினை விடுத்தார். 
 
இதேவேளை, ஐந்து வருடங்களுக்குள் பலஸ்தீன அரசாங்கத்தை அமைக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இங்கு அவர் நிகழ்த்திய உரையின் போது இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையில் நீண்ட காலமாக காணப்படும் உறவினை சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிகழ்வில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உட்பட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.