கொவிட் - 19 கட்டுப்படுத்த சுதேச ஒளடதங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

கொவிட் - 19 கட்டுப்படுத்த சுதேச ஒளடதங்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் தற்போது பரவி வரும் கொவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுதேச ஒளடதங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அனுமதியினை நேற்று (30) திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் உள்ளடக்கியதாக சுதேச நோய் எதிர்ப்புச் சக்தி ஒளடதங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு ஊக்கி மூலிகைக் கஞ்சி வழங்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயர்வேத திணைக்களத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள மூலிகைப் பொதியொன்றை நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குவ தீர்மானிக்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வருமானம் இழந்த 25 இலட்சம் குடும்பங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏனைய அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்குவதற்காகவும் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.