புற்றுநோய் பராமரிப்பு சங்கத்தில் பங்களாதேஷின் 50ஆவது சுதந்திர நிகழ்வு
பங்களாதேஷின் 50ஆவது சுதந்திர நிகழ்வும், அந்நாட்டு தந்தையின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்வும்; மாத்தறையிலுள்ள இலங்கை புற்று நோய் பராமரிப்பு சங்கத்தில் அண்மையில் இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் தாரீக் எம்டி ஆரிபூல் இஸ்லாம், புற்றுநோய் பராமரிப்பு சங்கத்தின் ஸ்தாபக தலைவர் கலாநிதி சமதி ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது 'பங்கபந்து ஞாபகார்த்த மானியம்' புற்றுநோய் பராமரிப்பு சங்கத்திற்கு வழங்கப்பட்டது. அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள புற்று நோயினால் பாதிக்கப்பட்ட 50 சிறுவர்களை பாராமரிப்பதற்கான புலமைப்பரிசிலும் இதன்போது பங்களாதேஷினால் வழங்கப்பட்டது.
பங்களாதேஷின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமேன் இந்த நிகழ்வில் விசேட வீடியா உரையினை நிகழத்தியமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)