மு.காவின் 02 மனுக்களுடன் 20 இற்கு எதிராக 21 மனுத் தாக்கல்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இன்று (28) திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்த்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முதலாவது மனு கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல்.தவம் ஆகியோர் சார்பில் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது மனு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்களினால் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக இன்று மாலை வரை 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான போராசிரியர் ரத்ன ஜீவன் ஹுல் ஆகியோரும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
Comments (0)
Facebook Comments (0)