கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாசவினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முப்பது இலட்சத்து முப்பது ஆயிரம் (3,030,000) ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் இன்று (02) அன்பளிப்புச் செய்யப்பட்டன.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்தே இந்த உபகரணங்கள் கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் பனிப்பாளர் ஐ.எம்.ஜவாஹிரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' எனும் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் 'ஜன சுவய' கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 24ஆவது கட்டமாக உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன் பிரகாரம் இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதி வாய்ந்த Multiple Monitors உபகரணங்கள் இரண்டும், பன்னிடரண்டு இலட்சத்து நாப்பது ஆயிரம் ரூபா பெறுமதியான Optiflow Nasal Therapy உபகரணங்கள் இரண்டும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் 'ஜன சுவய' கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னர் 23 கட்டங்களில் 68,874,000 ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கி வைக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)