சர்வோதயாவுடன் இணைந்து ‘Sabrina Yusoof Women’s வலுவூட்டல் முயற்சியை ஆரம்பித்துள்ள Expolanka
இலங்கை பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை எளிதாக்கும் முயற்சியில், உலகளாவிய ரீதியில் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான Expolanka, சர்வோதயாவுடன் இணைந்து ‘Sabrina Yusoof Women’s வலுவூட்டல் முன்முயற்சியை அறிமுகப்படுத்தியது.
குறைந்த வருமானம் பெறும் பெண் தொழில்முயற்சியாளர்கள் தங்களுடைய சொந்த வியாபார முயற்சிகளை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிதியளிப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்டது.
மேலும் இலங்கைப் பெண்கள் தங்களுடைய தனக்கென்று நிலையான வருமானத்தை
உருவாக்குவதன் மூலம் நிதி சுதந்திரத்தைப் பெற முடியும். கொழும்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட MSMEகளுக்கு அவர்களின் வணிகங்களை வலுவூட்டும் வகையில் மானியம் வழங்குவதையும், வளர்ந்து வரும் ‘புதிய இயல்புக்கு’ (New Normal) ஏற்ப அவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டது.
இத்திட்டத்திற்காக மொத்தம் 24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எக்ஸ்போலங்கா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனிப் யூசூப், Sarvodaya Shramadana Movementஇன் தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விசேட நிகழ்வின் போது இந்த திட்டத்தின் உத்தியோகபூர்வ அறிமுகம் இடம்பெற்றது.
“நமது தேசத்தின் பெண்கள் முழு அதிகாரம் பெற்றால்தான் நமது தேசத்தின் வளர்ச்சி உண்மையிலேயே ஆரம்பிக்கும். Sabrina Yusoof Women’s வலுவூட்டல் முன்முயற்சியின் மூலம், வளர்ச்சியடையும் திறன் கொண்ட பெண்கள் தலைமையிலான MSMEகளுக்கு நிதி உதவி, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம், மேலும் சமூகம் முழுவதும் நேர்மறையான விளைவை உருவாக்குகிறோம்.
இதையொட்டி, இலங்கைப் பெண்கள் வளர்ச்சியடைவதற்கும், அவர்களின் சொந்த நிதிச் சுதந்திரத்தை அடைவதற்கும் இந்த வணிகங்கள் அதிக வாய்ப்புகளை உருவாக்கும். இதுவே எமது தேசத்தை வளப்படுத்துவதற்கான பாதை என நாங்கள் நம்புகிறோம்,
மேலும் சர்வோதயா போன்ற உறுதியான ஒரு பங்குதாரருடன் இணைந்து செயற்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இதன் மூலம் வலுவூட்டல் செயற்திட்டங்கள் அதன் முழுத் திறனை அடைய உதவுகிறது” என Expolanka குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனிப் யூசுப் தெரிவித்தார்.
இந்த ஒன்றுகூடலானது, இந்த வணிகங்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கும், அவை முன்னேறும்போது கூடுதல் நிதி ஒதுக்குவதற்கும் Expolanka மற்றும் சர்வோதயா உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குழுவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வணிக பங்குதாரர்களின் முதல் தொகுதி அவர்களின் வணிக நிறுவனம் / யோசனை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதற்கான நிதித் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பங்குதாரர்கள் உணவு, கைவினைப்பொருட்கள், ஆடைகள், தையல், பாதணிகள், நிலையான அழகு பராமரிப்பு மற்றும் அலங்கார வளர்ப்பு மீன்கள் வரை பல்வேறு தொழில்களில் செயல்பட்டு வந்துள்ளனர்.
இந்நிகழ்வில் சர்வோதய தலைவர் கலாநிதி வின்யா ஆரியரத்ன கருத்து தெரிவிக்கையில்,
"எங்களது Expolanka உடனான ஈடுபாடு, பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு புத்துயிர் பெறுவதற்கும் செழித்தோங்குவதற்கும் உதவும் சூழலை உருவாக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலமும், கோவிட்டுக்குப் பிந்தைய சூழலில் இந்த முயற்சிகளை மாற்றியமைக்கவும், மீள்தன்மையை உருவாக்கவும் உதவும் தொழில்நுட்ப ஆதரவின் மூலமாகவும் இது மேற்கொள்ளப்படும். எங்களின் பரந்த உள்கட்டமைப்பு மற்றும் திறன்கள் Expolankaவின் ஆதரவு மற்றும் இந்தத் திட்டத்தில் வெற்றியை அளிப்பதில் உள்ள ஆர்வத்தால் நன்கு மேம்படுத்தப்படும்” என்றார்.
பெண் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக ‘Sabrina Yusoof Women’s வலுவூட்டல் முன்முயற்சி மூலம் செயல்படுத்தப்படும் தொடர்ச்சியான ஈடுபாடுகளில் இந்தத் திட்டத்தின் துவக்கம் முதலாவதாக இருக்கும். செயற்திட்ட வலுவூட்டல் முதன்முதலில் Expolankaவின் பேண்தகைமையின் தலைவரான மறைந்த சப்ரினா யூசூப் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
அவர் மிகவும் வளமான மற்றும் சிறந்த இலங்கையை உருவாக்குவதில் அயராத அர்ப்பணிப்பு, அன்பு மற்றும் ஆர்வத்துடன் பணியாற்றினார். இந்த முன்முயற்சிகள் அவரது நினைவாகவும், அவருடைய வாழ்க்கைக்கு மரியாதை மற்றும் அவரது சிந்தனை உட்பார்வைக்கு ஏற்பவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
ஒரு அமைப்பாக Expolanka அதன் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை முயற்சிகளின் மையத்தில் உள்ள முக்கியமான சமூக உந்துதல், நிலையான, தொழில்முனைவுத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் எப்போதும் முன்னணியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)