இலங்கையைப் பாதுகாத்தல்

இலங்கையைப் பாதுகாத்தல்

வினோத் மூனசிங்க

இலங்கை, 75 ஆண்டுகளாக, உள்நாட்டு அமைதியின்மை, கிளர்ச்சிகள் மற்றும் இராணுவ சதி முயற்சிகள், போர் அல்லது மிகவும் நுட்பமான பொருளாதார நாசவேலைகள் அல்லது வெளிநாட்டு சக்திகளின் பொருளாதாரத் தடைகள் போன்ற பல உள்ளக மற்றும் வெளியக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தது.

1971 கிளர்ச்சியைத் தோற்கடிப்பதில் இருந்து 1987ல் இந்தியாவுடனான மோதலின் படுதோல்வி வரை, ஈழப்போர் III இல் தோல்விக்கு மிக அண்மையில் சென்றது முதல் நான்காம் ஈழப் போரில் வெற்றி பெற்றது வரை பல்வேறு அளவிலான வெற்றிகளுடன் அது அவற்றை சந்தித்துள்ளது.

இந்த ஆபத்துக்களை வினைத்திறனாக சமாளிப்பதற்கு நாடு அதன் சொந்த சமீபத்திய வரலாற்றிலிருந்தும், மற்ற நாடுகளின் அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும். அது அதன் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மேம்படுத்தி, அதன் ஒப்பீட்டளவிலான வறுமையை மனதில் கொண்டு அவ்வாறு செய்ய வேண்டும்.

இராஜதந்திரம், தடுத்தல் மற்றும் ஏமாற்றுதல்

இராஜதந்திரம், தடுத்தல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவை பிரதான வகிபாகங்களை வகிக்கும் மோதலைத் தவிர்ப்பதை முதன்மையான நோக்கமாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு மூலோபாயம் இலங்கைக்கு தேவைப்படுகிறது.

வரலாற்று ரீதியாக, இது அதன் முதலாவது பாதுகாப்பு இராஜதந்திரமாக பயன்படுத்தப்பட்டதுடன், இது 1980 களில் இந்தியாவின் தலையீடு போன்ற தோல்விகளுக்கு வழிவகுத்தது.

இது அணிசேராமைக்கு நிச்சயமாக திரும்புவதுடன், இந்தியப் பெருங்கடலில் அணுசக்தி அல்லாத "சமாதான வலயத்தை" வலியுறுத்துவதுடன், இருப்பினும் பல்தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தடுக்காமல், வலிமை மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டையும் கொடுக்கும் தொடர்புகளை உருவாக்கி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெறுமனே "உரையாடல் பங்குதாரர்" அல்லாமல் முழுமையான உறுப்பினராக மாற வேண்டும்.

இந்த தந்திரோபாயத்திற்கு ஒரு ஆக்கிரமிப்பாளருக்கு மிகவும் விலையுயர்வான ஒரு ஆக்கிரமிப்பு அல்லது பிற குறுக்கீடு தேவைப்படுகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் உக்ரைன் போன்றன ஒரு சிறிய அரசு தன்னைத் தற்காத்துக் கொண்டால், பெரியவற்றிற்குப் பலத்த உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டின.

எனவே, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கியூபாவைப் போலவே, எந்தவொரு மோதலுக்கும் தாங்க முடியாத செலவீனங்களை அதிகரிப்பதன் மூலம் ஆக்கிரமிப்பாளரைத் தடுக்க இலங்கையால் முடியும். இது உள்ளக அச்சுறுத்தல்களுக்கும் சமமாகப் பிரயோகிக்கப்படுவதுடன், கிளர்ச்சி அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.

நாட்டின் வளங்கள் பற்றாக்குறை, நாட்டின் இராணுவ திறன்கள் மற்றும் வளங்களை மிகைப்படுத்தி, பலவீனங்களை மறைத்து, பலத்தை வலியுறுத்தும் ஒரு தடுத்தல் மூலோபாயத்தை அவசியமாக்குகின்ற வஞ்னையின் பயன்பாட்டை உருவாக்குகின்றது.

குறைபாடுகள்

தடுப்புக் கொள்கைக்கு ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுவதுடன், இது பலவிதமான திறன்களை உள்ளடக்கியது மற்றும் பரந்த அளவிலான அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு பதிலளிக்கக்கூடியது.

இலங்கையில் ஒரு பெரிய இராணுவம் உள்ளதுடன் முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே 247,000 இராணுவ சேவைப் பணியாளர்கள் உள்ளதாக மதிப்பிடுகிறார். இது மூன்று தசாப்த கால உள்நாட்டு மோதலில் காணப்பட்ட ஒப்பீட்டளவில் குறைந்த கொரில்லா அல்லது வழக்கமான போருக்கு ஏற்றதாகும்.

நவீன போருக்குத் தேவையான திறன்கள் மற்றும் உயர்-தொழில்நுட்ப உபகரணங்களைக் கொண்டிருக்கவில்லை, எனவே வெளிப்புற அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் திறன் பற்றாக்குறையாகவுள்ளது.

மனித வளங்களில் மிகஅதிகமாக காணப்படும் சக்திகளின் கடுமையான ஏற்றத்தாழ்வு, மற்றும் (ஒரு தீவு தேசத்திற்கு வியக்கத்தக்க வகையில்) கடல் மற்றும் காற்றை விட நிலம் தொடர்பில் அதிக முக்கியத்துவத்தை கொண்டிருத்தல் ஆகியன அவை வெளியக அச்சுறுத்தல்களைக் காட்டிலும் உள்ளக அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துகின்றன என்பதைக் குறிக்கிறது.

இந்த மூலோபாய நோக்குநிலையானது தேசத்தின் பாதுகாப்பு மையத்தை ஒரு நலிவான இடத்தில் ஒன்றாகக் கொண்டுவந்த புதிய இராணுவத் தலைமையகமான "ரெக்டகனை" பார்க்கும்போது தெளிவாகின்ற அதேசமயம் வெளிப்புறத் தாக்குதலை எதிர்கொண்டால் அது நாட்டின் ஊடாக பரவ வேண்டும்.

அதே சமயம், நவீன போர்முறைக்குத் தேவையான உயர் தொழில்நுட்ப உபகரணங்களும், பயிற்சிகளும் பற்றாக்குறையாக உள்ளன. இராணுவத்தின் விமான எதிர்ப்புப் படைப்பிரிவுகள் கூட SLAF வான் பாதுகாப்புப் பிரிவால் பிரதியிடப்பட்டுள்ள அதேசமயம் பெரும்பாலான நவீன இராணுவங்கள் களமிறக்கிய தங்கள் துருப்புக்களுடன் AA மின்கலங்கள் மூலமாக இயங்கும் மொபைல் தொலைபேசிகளை கொண்டுள்ளன. 

இது மாற்றியமைக்கப்பட வேண்டும், கருவிகளை பலப்படுத்தி, SLN மற்றும் SLAF வீரர்கள், அடிப்படை பாதுகாப்பு அல்லது கமாண்டோ பணிக்கு மேலதிகமாக, மாலுமிகளாக அல்லது விரிவாக்கப்பட்ட வான்/கடல் கடற்படைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு பணியாளர்களாக மீண்டும் பயிற்சியளிக்கப்பட வேண்டும்.  அதிகப்படியான ராணுவ வீரர்களும் மீண்டும் பயிற்சி பெற்று கனிஷ்ட சேவைகளுக்கு மாற்றப்பட வேண்டும்.

காலனித்துவ நீக்கம் மற்றும் ஜனநாயகம்

ஆயுதப் படைகளின் அளவு அரசாங்கத்தில் அவர்களின் உயர்மட்ட அணிவகுப்பின் வகிபாகத்தை அதிகரித்துள்ளதுடன், இது இராணுவ சதிப்புரட்சிகளை விளைவாக்கக்கூடிய ஆபத்தான போக்காகும்.

தேசிய பாதுகாப்பின் தேவைகளுக்கும் இராணுவ ஊடுருவலில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கும் இடையில் சமநிலையை நாட வேண்டும். சிலியில் அலெண்டேவுக்கு எதிரான 1973 பினோஷே சதி, பிரிட்டனில் ஹரோல்ட் வில்சனுக்கு எதிரான 1974 "மௌனமான சதி" மற்றும் 1961 இன் இலங்கையின் தோல்வியுற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி போன்ற சம்பவங்கள், அரசாங்கங்களுக்கு இராணுவத்திலிருந்து ஏற்படும் ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கையை அளிக்கின்றன.

இலங்கையின் ஆயுதப் படைகள் காலனித்துவ ஆட்சிக் கருவிகளில் இருந்து நேரடியாக வந்தவை. இலங்கை இராணுவம் சிலோன் காலாட்படை மற்றும் சிலோன் காரிஸன் பீரங்கிகள் ஆகியவற்றிலிருந்து உருவானதுடன், கடற்படை மற்றும் விமானப்படை 1948 க்குப் பிறகு உருவாக்கப்பட்ட போதிலும், அவை 1950 களில் பிரிட்டிஷ் அதிகாரிகளால் கட்டளையிடப்பட்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மரபுகளைப் பின்பற்றியிருந்தன.

கில்ட்டட் பேக் பைப் பேண்டுகள் ஹெவிசி பேண்டுகளை விட அதிக எண்ணிக்கையில் உள்ளதுடன், ஐரோப்பிய அரண்மனைகளின் முன்பாகவுள்ள இராணுவ அரணை ஒத்த முன்னரங்கு சுவர்களை கொண்டுள்ளன.

காலனித்துவ எதிர்ப்பு, ஜனநாயக சம்பிரதாயங்கள் இந்த மரபுகளை பிரதியீடு செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகள் அல்லாத ஆயுதப் படைகளுடன் கூட்டுப் பயிற்சிகள் அதிகம் நடைபெற வேண்டும்.

வெளிநாட்டுப் பயிற்சியில் தற்போது இருப்பது போல் சில நாடுகளை மட்டும் அல்லாது பல நாடுகளை உள்ளடக்கியிருக்க வேண்டும். பாராளுமன்றம் கூட, அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக ஓர் உத்தரவாதம் போல ஒரு விசுவாசமான "குடியரசு பாதுகாவலனை” உருவாக்க வேண்டும்.

தன்னம்பிக்கையான பாதுகாப்பு

நவீன பாதுகாப்பு அமைப்புகள் வினைத்திறனானதாக இருப்பதற்கு செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனித தொழிலநுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புத்தாக்கங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். முற்றுகை அல்லது தடை விதிப்புகள் ஏற்பட்டால், பாதுகாப்பு முயற்சியைத் தக்கவைக்க போதுமான அளவு இராணுவத் தொழிற்துறையை நாடு கொண்டிருப்பது இலங்கையின் பாதுகாப்பிற்கான நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு தேவைப்படுகின்றது. நாடு தற்போது பற்றாக்குறையாகவுள்ள அதனது சொந்த இராணுவ-தொழிற்துறை வளாகத்தை உருவாக்க வேண்டும்.

தன்னம்பிக்கையான பாதுகாப்பை அடைவதற்கு ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அந்நியச் செலாவணி செலவீனத்தைக் கணிசமாகக் குறைப்பதனூடான நன்மை மூலமாக, வெளிநாட்டு மூலங்களிலிருந்து ஒரு பெரிய அளவிலான சுதந்திரத்தை அடைய முடியும்.

ஆயுத உற்பத்தியின் விருத்தியானது, பிற தொடர்புடைய தொழிற்துறை துறைகளின் வளர்ச்சியுடன் இணைந்து பயணிக்கும். கடற்படையின் தேவைகளுக்கு ஒரு பெரிய உள்நாட்டு கப்பல் கட்டும் தொழிற்துறை தேவைப்படுவதுடன், அனைத்து சேவைகளின் போக்குவரத்து தேவைகளுக்கும் கணிசமான மோட்டார் இயந்திர தொழிற்துறை தேவைப்படுகிறது, மேலும் நவீன போர்க்கள தொழில்நுட்ப சூழலுக்கு அதிநவீன மின்னணுவியல்/ இயந்திரவியற்துறை/ ரோபாட்டிக்ஸ் துறை தேவைப்படுகிறது.

இஸ்ரேலின் அதிநவீன இராணுவ-தொழிற்துறை வளாகம் (உலகின் 10 வது பெரிய ஏற்றுமதியாளர்) 1931 இல் சிறியதாக ஆரம்பித்ததுடன், பாலஸ்தீனத்தில் சியோனிச பயங்கரவாதிகள் சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்து அவர்களின் ஆயுத உற்பத்தி திறன்களை கட்டியெழுப்பினர்.

விடுதலைப் புலிகளால் கூட உள்நாட்டு மோதலை பயன்படுத்தி தமது உற்பத்தி வசதிகளை கட்டியெழுப்ப முடிந்தது. மாறாக, இலங்கையின் ஆயுதப்படைகள், ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக பெருமளவிலான போர்ப் பொருட்கள் தேவைப்பட்ட போதிலும், அதன் பொறியியலாளர்கள் மீளமைக்கப்பட்ட ஃபெரெட் கவச கார்கள், யூனிகார்ன் கண்ணிவெடிகளைத் தாங்கும் லொறிகள் மற்றும் Colombo-class அதிவேகத் தாக்குதல் படகுகளை உருவாக்குவதில் அல்லது புனரமைப்பதில் தங்கள் திறன்களை வெளிப்படுத்திய போதிலும், இறக்குமதியில் முடக்கப்பட்டிருந்தனர்.

உள்நாட்டு மோதலின் முடிவில் இருந்து இராணுவ உற்பத்தி ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆளில்லா விமானத்தை வடிவமைத்து உருவாக்க விஞ்ஞான நிறுவனத்துடன் விமானப்படை இணைந்து பணியாற்றியதுடன் குறுகிய தூர ஏவுகணையை உருவாக்கி வருகின்ற அதே நேரத்தில் இராணுவம் அது தயாரிக்கும் அல்லது பொருத்தும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

ஈழ மோதலில் இருந்து போரில் வெற்றிபெறும் சாதனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பிரதியெடுப்பது அல்லது உரிமத்தின் கீழ் அவற்றை உருவாக்குவது ஆரம்பம் ஒன்றிற்கான ஒரு வழிமுறையென்பதுடன் உள்நாட்டு பராமரிப்பு மற்றும் இயலளவை கட்டியெழுப்புவதற்கான மறுசீரமைப்பு செயன்முறையும் ஆகும்.

அங்கோலா, பொலிவியா, கியூபா, லாவோஸ், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா போன்ற தொழிற்துறையில் வளர்ச்சியடையாத பிற மூன்றாம் உலக நாடுகளுடன் ஒத்துழைத்து பொருத்தமான ஆயுத அமைப்புகள் மற்றும் உபகரணங்களை உருவாக்குவது தொடர்பாகவும் இலங்கை ஆராயலாம். மிகப் பாரிய மற்றும் மேம்பட்ட பொருளாதாரங்கள் கூட இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன;

உதாரணமாக, Eurofighter Typhoon (பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின்) அல்லது புதிய ஐரோப்பிய நீர்மூழ்கி எதிர்ப்பு அமைப்பு (பிரான்ஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன்) போன்ற செயற்திட்டங்களை குறிப்பிடலாம்.

தாக்குதல்

பல்தரப்பு அணிசேராமை, தடுப்பு, ஜனநாயக காலனித்துவ நீக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தும் ஓர் பாதுகாப்பு மூலோபாயம் மற்றைய நாடுகளுக்கு ஒரு வெற்றிகரமான அணுகுமுறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் மூலம், இலங்கை தனது பிரஜைகள் மற்றும் நலன்களை வினைத்திறனாக பாதுகாக்கும் அதே வேளையில் ஏனைய நாடுகளுடன் நல்லுறவை பேண முடியும்.

2000 களின் இறுதியில், UNSW DPhil ஆய்வுக் கட்டுரையானது, ஆசிய-பசிபிக் பிராந்தியமானது "இன்னும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, ஆனால் கடந்த தசாப்தத்தின் இறுதியில் காணாமல் போன பல்தரப்பு, பிராந்திய மற்றும் இருதரப்பு பாதுகாப்பு பொறிமுறைகள் இன்னமும் பற்றாக்குறையாக உள்ளன" என்று வாதிட்டது. இலங்கை அதன் பாரம்பரிய அணிசேராக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் அத்தகைய நிறுவனங்களை வலுப்படுத்த உதவ முடியும்.

அணிசேரா நிலைப்பாட்டை தொடரும் தீர்மானமானது, நாடு மற்ற சக்திகளுக்கு இடையிலான மோதல்களில் இழுக்கப்படுவதைத் தவிர்க்க அனுமதித்துள்ள அதே நேரத்தில் அதற்கு சொந்த நலன்கள் இருக்கும் போது மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க மற்றும் பணியாற்ற முடியும்.

ஜனநாயக காலனித்துவ நீக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இலங்கைக்கு அதன் கடந்த கால காலனித்துவ மரபுகளை அகற்றி மேலும் சமமான மற்றும் நீதியான சமூகத்தை கட்டியெழுப்ப உதவ வேண்டும். ஒட்டுமொத்தமாக, இந்த பண்புகள் நாட்டின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்திற்கு பிரதானமானதாக இருக்க வேண்டும்.

இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, பல்தரப்பு "பாதுகாப்பு பொறிமுறைகளை" வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்கா ஒருதலைப்பட்சமான மற்றும் ஆக்கிரமிப்பு இராணுவ மூலோபாயத்தை ஏற்றுக்கொண்டதுடன், இது "பனிப்பிரதேச சமாதானத்தை" முடிவுறுத்தியது.

மேலாதிக்கமான தனியான வல்லரசுக்கிடையிலான பனிப்போர், அதன் சொந்த சக்தியை திணறலுக்குள்ளாக்குவதுடன் பல்தரப்பு பெரும் வல்லரசுகளின் ஏறுமுகமான, நிலையான வடிவமற்ற, மாற்று அணிகள் இலங்கை போன்ற வறிய மற்றும் பலவீனமான நாட்டிற்கு அதன் பாதையில் உள்ள ஆபத்துக்களை கடந்து செல்வதை கடினமாக்குகிறது.

2022ஆம் ஆண்டு அரகலய எழுச்சிக்குப் பின்னர் இலங்கையின் பாதுகாப்பிற்கான வாய்ப்புகள் மோசமடைந்துள்ளதாகத் தோன்றுகிறது. அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதுடன், இலங்கை போட்டி சக்திகளுக்கு இடையில் வைத்திருந்த நுட்பமான சமநிலையை பலவீனப்படுத்தியதுடன் SCO சக்திகளுக்கு எதிரான இராணுவ அணிகளுக்குள் அதனை உள்ளீர்க்கின்றது.

இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலர் ஜெடிடியா பால் ராயல் தேவையற்ற வகையில் சிக்கலாக்குகின்ற விதமாக, ஆயுதப் படைகளின் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்காக, எதிர்பாராதவிதமாக நாட்டிற்கு விஜயம் செய்தார்.

உக்ரைனில் நடந்த "மைதான் சதி"யில் அவரது பங்கிற்காக புகழ் பெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நுலாண்டின் கருத்தைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி யோசித்து வருகின்றனர்.

தகவலறிந்த ஊகங்களின்படி, திருகோணமலையில் உள்ள இந்திய-அமெரிக்க கூட்டுத் தளமானது, அமெரிக்கா பூமி முழுவதும் தாபித்துள்ள அண்ணளவாக 750 இராணுவ தளங்களை இணைத்து உலக நாடுகளை அணு ஆயுத எதிர்த் தாக்குதலுக்கான தாக்குதல் முனையமாக சாத்தியமாக்குகின்றது.

ஆதாரங்கள்

* ரோயல், ஜெடீதீயா போல். ஒருங்கிணைப்பு, பாதிப்பு மற்றும் அபாயம்: பொருளாதார-பாதுகாப்பு தொடர்பை புரிந்துகொள்வதற்கான ஓர் புதிய கட்டமைப்பு. முதுமாணி ஆய்வறிக்கை, UNSW கான்பெர்ரா, 2011, ப 157. https://doi.org/10.26190/unsworks/15071

வினோத் மூனசிங்க வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியலை கற்றதுடன், இலங்கையில் தேயிலை இயந்திரங்கள் மற்றும் மோட்டார் உதிரிபாகங்கள் மற்றும் ரயில்வே துறைகளில் பணியாற்றினார்.

பின்னர் அவர் பத்திரிகை துறை மற்றும் வரலாறுகளை எழுதுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்தின் ஆளுனர் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.