கட்டிலின்றி தவிக்கும் கொவிட் - 19 தொற்றாளர்கள்
கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள் கட்டிலின்றி தவிப்பதாக தெரிவிக்கின்ற நிலையில் இது போன்ற சம்பவமொன்று பாணந்துறை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
ஊடகவியலாளர் இந்திக்க ஸ்ரீ அரவிந்த, கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வைத்தியசாலையில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ள வார்ட்டில் 12 கட்டில்கள் மாத்திரமே காணப்படுகின்ற நிலையில் 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர் இந்திக ஸ்ரீ அரவிந்தவிற்கும் குறித்த வார்ட்டில் கட்டில் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஊடகவியலாளர் ஈஸ்வரன் ரட்ணம் தனது டுவிட்டரில் பதிவொன்றினை மேற்கொண்டதை அடுத்து இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Journalist Indika Sri Aravinda who has tested positive for Covid and has been admitted to the Panadura Base Hospital shows us the real picture in some hospitals. The ward he is in has only around 12 beds but there are around 25 patients. Aravinda doesn’t have a bed #Srilanka #lka pic.twitter.com/d8Yf25gYQF
— Easwaran Rutnam (@easwaranrutnam) May 22, 2021
அத்துடன் குறித்த வார்ட்டில் உள்ள நோயாளர்களுக்கு உடனடியாக கட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Thank you for bringing this up. I will inform the relevant authorities of this. I am certain we can arrange some beds for these patients.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 22, 2021
Comments (0)
Facebook Comments (0)