கொரோனா பரவலில் இருந்து கல்முனையை விரைவில் மீட்க முடியும்: டாக்டர் சுகுணன்

சர்ஜுன் லாபீர்

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினை கல்முனை நகர் பகுதியில் இருந்து மிக விரைவில் ஒழித்து விட முடியும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் நம்பிக்கை வெளியிட்டார்.

இதற்கு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்புக்கள் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மேயர் ஏ.எம் றக்கீப், கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரீப், பிராந்திய சுகாதார பணிமனையில் திட்டமிடல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம் மாஹிர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ. ரிஸ்னி, கல்முனை பெரிய பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் மற்றும் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட உயர் மட்ட கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (31) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே டாக்டர் ஜீ. சுகுணன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.