குவைத்தின் உதவியுடன் 66 பாலங்களை புனரமைக்கப்படும்
குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் 07 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின்கீழ் மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டின் ஏழு மாகாணங்களை உள்ளடக்கிய இந்த பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 66 பாலங்களை புனரமைக்கும் திட்டத்திற்கு குவைத் அரசு நிதியுதவி வழங்குகிறது. இந்த 66 பாலங்களும் புனரமைக்கப்பட்டு 03 வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பழைய பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்கள் கட்டுவதும், குறுகலான பாலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பாலங்களை பயன்படுத்தும் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டால் நாடு பூராகவும் உள்ள வீதி வலையமைப்பிற்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் வகையில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)