இம்ரான் கானிற்கு கொவிட் - 19 தொற்று
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு கொவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சர் பைசால் சுல்தான் இன்று (20) சனிக்கிழமை அறிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே பிரதமர் இம்ரான் கானிற்கு கொவிட் - 19 இற்கான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே அவருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர், வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)