சுதந்திர தினத்துக்கு சவூதி தூதுவர் வாழ்த்து

சுதந்திர தினத்துக்கு சவூதி தூதுவர் வாழ்த்து

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75வது சுதந்திர தினத்திற்கு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி வாழத்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கை அரசு மற்றும் அதன் நேசமிகு குடிமக்கள் அனைவருக்கும் தூதுவர் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கைக் குடியரசு மேலும் முன்னேற்றமும் செழிப்பும்  பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.