NFGG இன் தவிசாளர், தேசிய அமைப்பாளர் ராஜினாமா
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளராக சிராஜ் மஷ்ஹுர் மற்றும் தேசிய அமைப்பாளராக நஜா முஹமட் ஆகியோர் தமது பதவிகளிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இராஜினாமா செய்துள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் அண்மையில் அக்கரைப்பற்றுக்கு விஜயம் செய்த போது சிராஜ் மசூரும் அவருடன் இணைந்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்த நிலையிலேயே குறித்த இராஜினாமா தொடர்பான அறிவிப்பினை அக்கட்சி இன்று (27) திங்கட்கிழமை வெளியிட்டது. இந்த இராஜினாமாக்கள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்ற அக்கட்சியின் தலைமைத்துவ சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போ அந்த இராஜினாமாக்களை ஏற்றுக்கொள்வதென தலைமைத்துவ சபை ஏகமனதாக முடிவு செய்ததுடன் இப்பதவிகளுக்கான புதிய நியமனங்கள் தொடர்பாகவும் தலைமைத்துவ சபை விரிவாக ஆராய்ந்தது.
இதற்கான பரிந்துரைகள் ஏகமனதாக சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக கலந்துரையாடப்பட்டன. இது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்னும் ஓரிரு தினங்களில் மேற்கொள்ளப்பட்டு இப்பதவிகளுக்கான நியமனங்கள் பற்றி அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)