நீர்க் கட்டணமும் விரைவில் அதிகரிக்கும்

நீர்க் கட்டணமும் விரைவில் அதிகரிக்கும்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்இ நீர்க் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும்இ நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மக்கள் நலன்கருதி குறுகிய காலப் பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக் குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

மாத்தளை நகர மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

"பெரும்பாலான நீர் வழங்கல் திட்டங்கள் மின்சாரத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால், நீர் வழங்கல் பொறிமுறைக்கான செலவீனங்களும் அதிகரிக்கும் என்றும் அதனை ஈடுசெய்வதற்காகவே கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டப் பின்னர், சூரிய சக்தி மூலம், நீர் வழங்கல் திட்டத்தை இயங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செலவீனம் குறையும். நீர் கட்டணத்தையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்" என்றார்.