வாழைத்தோட்ட பள்ளிக்கு விஜயம் செய்த சஜித்

வாழைத்தோட்ட பள்ளிக்கு விஜயம் செய்த சஜித்

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் ஜனன தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டோர் சர்வமத வழிபாடுகளுக்காக அனைத்து மதஸ்த்தளங்களுக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது, வாழைத்தோட்டம் பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின்  கொழும்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் எனப் பலரும் விஜயம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசர பொதுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச கலந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.