காஸாவில் இனப்படுகொலைக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்
பலஸ்தீன காஸா பிரதேசத்தில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பயங்கர மோதல்கள் உள்ளன என்றும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரலாற்றில் இஸ்ரேலிய யூதர்களுக்கு ஏற்பட்ட அநீதியும், அவர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய படுகொலைகளும் மறக்கப்படக்கூடாது என்றும் இந்த நேரத்தில் இரு தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் தனி நாட்டு அங்கீகாரம் வழங்குவதே இதற்கான நிரந்தர தீர்வாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)