ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையினை ஆய்வு செய்ய அமைச்சர் குழு நியமனம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையினை ஆய்வு செய்ய அமைச்சர் குழு நியமனம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கைகளை ஆய்வு செய்ய அமைச்சர் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராபஜபக்ஷவினால் நேற்று (19) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் தேசிய பாதுகாப்பு துறைசார் பாராளுமன்ற மேற்பார்வை செயற்குழுவின் அறிக்கை ஆகியவற்றினை ஆய்வு செய்வதற்காவே இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு குழுக்களினதும் அறிக்கைகளின் உள்ளடக்கங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு அறிக்கையிடுவதற்காவே இந்த அமைச்சர் குழுவின் பிரதான பணியாகும்.

அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவின் உறுப்பினர்களாக அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரனதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் உளளனர்.

இந்த குழுவின் பணிகளுக்கு வசதிகளை வழங்குதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நெறிப்படுத்த ஜனாதிபதி அலுவலகத்தின் சட்ட பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹனதீர இதன் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.