ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்குகிறது; விரைவில் வர்த்தமானி

ஆறு முஸ்லிம் அமைப்புக்கள் மீதான தடை நீங்குகிறது; விரைவில் வர்த்தமானி

எம்.எப்.எம்.பஸீர்

தடை செய்­யப்­பட்­டுள்ள 6 முஸ்லிம் அமைப்­புக்­களின் தடையை முற்­றாக நீக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. ஐந்து நிபந்­த­னை­களை மையப்­ப­டுத்தி இந்த தடை­யினை நீக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்ள நிலையில், அது குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் மிக விரைவில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

அதன்­படி, தெளஹீத் அமைப்­புக்­க­ளாக அறி­யப்­படும், ஐக்­கிய தௌஹீத் ஜமாஅத் (யூ.டி.ஜே.), சிலோன் தௌஹீத் ஜமாஅத் (சி.டி.ஜே.), ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் (எஸ்.எல்.டி.ஜே.), அகில இலங்கை தௌஹீத் ஜமாஅத் (ஏ.சி.டி.ஜே.), ஜம்­மி­யதுல் அன்­ஸாரி சுன்­னதுல் மொஹ­ம­தியா (ஜே.ஏ.எஸ்.எம்.) மற்றும் ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய மாணவர் இயக்கம் (எஸ்.எல்.ஐ.எஸ்.எம்.) ஆகி­ய­வற்றின் மீதான தடை­களை தளர்த்­தவே தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதில், குறித்த அமைப்­புக்­களை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­ப­டுத்தி தடை­யினை விதித்த அர­சாங்கம், தற்­போ­து அத்­தாக்­குதல் தொடர்பில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை புனர்­வாழ்­வ­ளிக்க அதே அமைப்­புக்­க­ளிடம் ஒத்­து­ழைப்பு கோரி­யுள்­ளமை விஷேட அம்­ச­மாகும்.

விடி­வெள்­ளிக்கு கிடைத்த தக­வல்கள் பிர­காரம், தடை­யினை தளர்த்த பாது­காப்பு அமைச்சு முன்வைத்­துள்ள 5 நிபந்­த­னை­களும் வரு­மாறு :

1. அமைப்­புக்கு நிதி திரட்டல், செலவு செய்தல் தொடர்பில் வெளிப்­படைத் தன்மை பேணப்­ப­டு­கின்­றது என்­பதை உறுதி செய்து வரு­டாந்தம், பாது­காப்பு அமைச்­சுக்கு அறிக்கை சமர்ப்­பித்தல். பாது­காப்பு அமைச்சு அது தொடர்பில் ஏதும் ஆலோ­ச­னைகள் வழங்­கினால் அதனை பின்­பற்­றுதல்.

2. அமைப்­புக்கள் முன்­னெ­டுத்துச் செல்லும் கல்வி நிலை­யங்கள் தொடர்பில் முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்தல். கல்வி அமைச்சு அவ்­வப்­போது பிறப்­பிக்கும் உத்­த­ர­வு­க­ளுக்கு அமைய அவற்றை முன்­னெ­டுத்து செல்லல்.

3. வெளி­நாட்­டி­லி­ருந்து நிதி­யினை பெற்­றுக்­கொள்ளும் போது, மத்­திய வங்கி அங்­கீ­க­ரித்­துள்ள முறை­மை­களின் கீழ் பெற்­றுக்­கொள்ளல்.

4. அமைப்பின் உறுப்­பி­னர்கள் தேசிய பாது­காப்­புக்கு அல்­லது பொது அமை­திக்கு பங்கம் விளை­விக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை தவிர்க்க தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுத்தல். உறுப்­பி­னர்­களின் நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பொறுப்­புடன் நடந்­து­கொள்ளல்.

5. உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்­கவும், இஸ்­லா­மிய தேசம் தொடர்பில் சமூகவலைத் தளங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சா­ரங்­களை முறி­ய­டிக்க எதிர் பிரச்­சா­ரங்­களை முன்­கொண்டு செல்­லவும் அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­குதல்

குறித்த நிபந்­த­னை­க­ளுக்கு மேல­தி­க­மாக, குறித்த முஸ்லிம் அமைப்­புக்கள் தடை­களை எதிர்த்து உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுக்­களை, தடை நீக்க வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்ட பின்னர் வாபஸ் பெற வேண்டும் என்­பதும் முஸ்லிம் அமைப்­புக்­க­ளுடன் பாது­காப்பு அமைச்சின் அதி­கா­ரிகள் (உளவுத் துறை அதி­கா­ரிகள் ) முன்­னெ­டுத்த கலந்­து­ரை­யா­டல்­களின் போது நிபந்­த­னை­யாக முன் வைக்­கப்­பட்­ட­தாக அறிய முடி­கின்­றது.

இவ்­வா­றான நிலையில், நிபந்­த­னை­க­ளுக்கு, தடையை நீக்கக் கோரிய 6 முஸ்லிம் அமைப்­புக்கள் இணக்கம் தெரி­வித்­துள்ள நிலையில், மிக விரை­வாக அது குறித்த வர்த்­த­மானி வெளி­யி­டப்­பட்டு தடை நீக்கம் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­கி­றது.

முன்­ன­தாக நாட்டின் சமா­தா­னத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தேசிய பாது­காப்பு, பொது­ மக்கள் ஒழுங்கு மற்றும் சட்­ட­வாட்­சியின் நலனில் அர­சாங்­கத்தின் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அடிப்­ப­டை­வா­தத்­துடன் தொடர்­பு­டைய 11 அமைப்­பு­களை தடை செய்­வ­தாக அதி­வி­சேட வர்த்­த­மா­னியை வெளி­யிட்டு அர­சாங்கம் அறி­வித்­திருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­து.

Vidivelli