பொதுத் தேர்தல் களத்தில் புது முகங்கள் அறிமுகம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பல புது முகங்களை களமிறக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன.இதே வேளை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உட்பட சில புதுமுகங்கள் தேசிய பட்டியல் மூலம் இணைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரஜரட்ட பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சரித ஹேரத், கலாநிதி நாலக கொடஹேவா, ‘வியத்மக’ அமைப்பின் அநுர பர்ணாந்து, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் டில்சான் உட்பட மேலும் சிலர் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் சன்ன ஜயசுமன அநுராதபுரத்திலும், கலாநிதி சரித ஹேரத் குருநாகலிலும், கலாநிதி நாலக கொடஹேவா மற்றும் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா என்போர் கம்பஹாவிலும், திலகரத்ன டில்சான் காலி மாவட்டத்திலும், அநுர பெர்ணாந்து கொழும்பிலும் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தேசியப் பட்டியல் மூலம் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் முன்னாள்ஆளுநர் அஜித் நிவாப் கப்ரால், கெவிது குமாரதுங்க ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-ஏ.ஆர்.ஏ.பரீல்-
Comments (0)
Facebook Comments (0)