கல்முனை சந்தாங்கேணி மைதான அபிவிருத்தி தொடர்பில் விளையாட்டு அமைச்சரிடம் முறைப்பாடு
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் கூட்டாக இணைந்தே இந்த முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளது.
சனிமோன்ட் விளையாட்டு கழகம், லொஜென்டஸ் விளையாட்டு கழகம், லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம், ரினோன் விளையாட்டு கழகம், பிர்லியன்ட் விளையாட்டு கழகம், இஸ்லாமபாத் விளையாட்டு கழகம் உள்ளிட்ட 20 விளையாட்டு கழகங்கள் இந்த முறைப்பாட்டு கடிதத்தில் கையளித்திட்டுள்ளன.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நிர்மாணிக்கப்படும் நீச்சல் தடாகத்தின் பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படல், மைதானத்திற்கான சரியான எல்லைகள் இதுவரை அடையாளம் இடாமை, மைத்தானத்திற்கான உறுதிப் பத்திரமின்னை, சட்டவிரோத காணி அபகரிப்பு தொடர்பில் கல்முனை மாநகர சபையினால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமை போன்ற தொடர்பிலேயே விளையாட்டு அமைச்சார் நாமல ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் டப்ளியூ.டி. வீரசிங்க, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜயகோன், விளையாட்டு அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா ஆகியோரிற்கு குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
Comments (0)
Facebook Comments (0)