வெளிநாட்டு பணக் கொடுக்கலை வசதிப்படுத்த "SL- Remit" mobile app
வெளிநாட்டு பணக் கொடுக்கல் வாங்கலை வசதிப்படுத்த "SL- Remit" mobile app இனை அறிமுகப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி குழுவொன்றினை நியமித்ததுள்ளது.
வெளிநாட்டு பணக் கொடுக்கல் வாங்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்யும் குறிக்கோளுடன் புதிய, குறைந்த செலவு பண அனுப்பல் வழிகளை அறிமுகப்படுத்துவதற்கான தேவையினை இனங்கண்டு, இலங்கைக்கென புதிய பணவனுப்பல் வழிகளை ஆய்வு செய்து ஆலோசிப்பதற்கும் பணவனுப்பல் செய்யப்படுகின்ற செலவினைக் குறைப்பது தொடர்பில் இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும்.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் பாங்க் ஒவ் சிலோன் பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹொங்கொங் அன்ட் சங்காய் வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் எக்ஸியாட்டா, மொபிட்டல் (பிறைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பவற்றிலுள்ள அனுபவம் பெற்ற தொழில்சார் நிபுணர்கள் இக்குழுவில் உள்ளடக்குகின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)