பயணத் தடையினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல்
பேருவளை பிரதேசத்தில் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நலன்புரி செயல்திட்டங்களை மேற்கொண்டு வரும் பேருவளை Maradana Charity அமைப்பு இன்று (08) செவ்வாய்க்கிழமை COVID-19 தொற்று நோயினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வறிய மற்றும் தேவையான 2,500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
Maradana Charity அமைப்பின் தலைவர் தஸ்தகீர் பாச்சா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லலித் பத்மகுமார விஷேட அதிதியாக கலந்துகொண்டு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் Maradana Charity அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பிரதேச நலன்விரும்பிகள், தனவந்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம், சிங்கள மற்றும் கிறிஸ்தவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் தற்பொழுது நிலவுகின்ற நெருக்கடியான நிலைமையில் வறிய மக்களுக்கு இது மிகுந்த பயனளிக்கும் என்பதுடன், இந்நலன்புரிச் சேவை பிரதேசத்தின் சக வாழ்வினை மேலும் கட்டியெழுப்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments (0)
Facebook Comments (0)