2,000 ரூபா கொடுப்பனவு கொவிட் நிதியத்துக்கு அன்பளிப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காரணத்தினால், தினசரி வருமானத்தை இழந்தவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,000 கொடுப்பனவை, இட்டுகம கொவிட் 19 சுகாதாரப் பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்பு செய்த நிகழ்வொன்று அநுராதபுர மாவட்டத்தின் தலாவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அருணபுர கிராமத்தில் பதிவாகியுள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த 25 குடும்பங்களுக்கு 2,000 ரூபா உதவித் தொகை வழங்கப்பட்டது. எனினுமு; நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற உதவித் தொகையினை மீண்டும் கொவிட் நிதியத்தில் வரவு வைக்குமாறு, அவர்கள் பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், அருணபுர கிராமத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிரிவினரின் நன்கொடைகளுடன் சேர்த்து, கொவிட் -19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்துக்கு 87,000 ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டதென, தலாவ பிரதேச செயலாளர் அநுராத திசாநாயக்க தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)