சவூதி அரேபியாவினால் உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு
வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான உலருணவுப் பொதிகள் சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.
ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினாலேயே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த உலருணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானியினால் செவ்வாய்க்கிழமை (28) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைசல் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம.எல்.எம். அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இந்த திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு இந்த உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)