பஹ்ரேன் தூதுவருக்கு அல் - குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு கையளிப்பு
புனித அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு, இந்தியாவிலுள்ள பஹ்ரேன் தூதுவர் அப்துல் ரஹ்மான் பின் முஹம்மத் அல் கொதிற்கு இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.
புது டில்லியினை மையமாகக் கொண்டு செயற்படும் இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்களுடனான உறவினை கட்டியொழுப்பு நோக்கில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போதே புனித அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிப்பட்ட புனித அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பே உயர் ஸ்தானிகரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தியாவிற்கான மொரோக்கோ தூதுவர், டில்லியிலுள்ள ஜமா மஸ்ஜித் மற்றும் இந்தியாவின் முஸ்லிம் மார்க் அறிஞ்சர்கள் சபை ஆகியவற்றுக்கும் உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால புனித அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு இதற்கு முன்னர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதத்க்கது.
Comments (0)
Facebook Comments (0)