'நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தல்களை ஒழிக்க நடவடிக்கை'
நாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தல்களை ஒழிப்பதற்கு முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.
அபாயரகமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் கீழுள்ள அத்தனகல்ல ஊராபொல புனர்வாழ்வு மையத்தின் வசதிகளை மேம்படுத்த புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இதனை தெரிவித்தார்.
சுமார் ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்கும் வகையில் இங்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐ.நா குற்றச்செயல் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவும் ஜேர்மன் அரசாங்கமும் இதற்கு அனுசரணை வழங்கியுள்ளது. கடற் படையும் பங்களிப்புச் செய்கின்றது.
போதைப்பொருள் மற்றும் கடத்தல்களை தடுக்கும் சர்வதேச தினத்துக்கு இணைவாக வைபவம் இடம்பெற்றது. போதை பொருளுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தொலைபேசி மென்பொருள் ஒன்றும் யுடியுப் செனல் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
Comments (0)
Facebook Comments (0)