அன்டிஜன் பரிசோதனைக்கு பயந்து பிரதமரை சந்திப்பதை தவிர்த்த எம்.பி

அன்டிஜன் பரிசோதனைக்கு பயந்து பிரதமரை சந்திப்பதை தவிர்த்த எம்.பி

கொவிட் - 19 நோயினை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் அன்டிஜன் பரிசோதனைக்கு பயந்து, கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் பங்கேற்பதை தவிர்த்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு அலரி மாளிகைக்கு சென்றுள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் - 19 மூன்றாவது பரவலை அடுத்து அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு போன்ற பல முக்கிய இடங்களுக்கு அன்டிஜன் பரிசோதனைக்கு பின்னரே விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கமைய குறித்த பாராளுமன்ற உறுப்பர்களும் அன்டிஜன் பரிசோதனைக்கு பின்னரே அலரி மாளிகைக்கு அனுமதிக்கப்படுவர் என அலரி மாளிகையின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த விடயத்தினை அறிந்த கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரொருவர், "பிரதமரினை சந்தித்து மக்கள் பிரச்சியினை பேசுவதற்கு கொவிட் பரிசோதனையா? அப்படி என்றால் அந்த சந்திப்பில் நான் கலந்துகொள்ளத் தேவையில்லை" எனக் கூறி அலரி மாளிகையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

-விடிவெள்ளி-