குறிஞ்சாகேணி பால நிர்மாணத்திற்கு சவூதியினால் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல்

குறிஞ்சாகேணி பால நிர்மாணத்திற்கு சவூதியினால்  10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கல்

றிப்தி அலி

கடந்த பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள கிண்ணியா, குறிஞ்சாகேணி பாலத்தின் நிர்மானப் பணிகளை மீள ஆரம்பிக்க 10.5 மில்லயன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் ஊடாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேராதனை – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மீதமாகவுள்ள தொகையே இந்த பால நிர்மாணத்திற்கு பயன்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பிலான திருத்தப்பட்ட ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவிற்கும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் (சட்டம்) அப்துல்மொஹ்சன் ஏ. அல்முத்லாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், பேராதனை – பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்தில் மீதமுள்ள நிதியினை நெடுஞ்சாலை வலையமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஊடாக குறிஞ்சாகேணி பாலத்தின்  நிர்மாணப் பணிக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பால நிர்மாணத்தின் ஊடாக கிண்ணியா பிரதேசத்தில் வாழும் சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து மற்றும் வணிகத் தேவைகளை இலகுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.