விகடன் ஊழியர்கள் 176 பேர் பணி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்
விகடன் குழுமத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 176 பேர் பணி நீக்கத்திற்கு எதிரான போராட்டமொன்று சென்னை அலுவலகத்திற்கு முன்பாக இன்று (22) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்தியாவில் தற்போது ஊரடங்கு நிலவுவதால் அரசின் உத்தரவினை மதித்து இந்த போராட்டத்தில் ஆறு பேருக்கு மேல் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்த்ககது.
இதேவேளை, குறித்த குழுத்தின் நிர்வாகத்தினால் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டால் வழக்கு தொடரலாம் என்ற அச்சத்தின் காரணமாக ஊழியர்கள் கட்டாயமாக ராஜினாமா செய்யபட வைப்பதை தவிர்க்க வேண்டும் என இந்த போராட்டத்தின் போது வலியுறத்தப்பட்டது.
இந்த ஊழியர்கள் 176 பேர் பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு விகடன் வழங்கப்பட்ட விருதுகளை சிலர் திருப்பி அனுப்பியுள்ளனர். இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பினை அவர்கள் தங்களின் முகநூலில் மேற்கொண்டுள்ளனர்.
Comments (0)
Facebook Comments (0)