'நானும் மனைவியும் ஒரே கோப்பையில் தேநீர் குடிப்போம்; மனைவிக்கு கொரோனா இருந்திருந்தால் எனக்கு வந்திருக்கும்'
கொவிட் - 19 தொற்று அடையாளம் காணப்படாதா நிலையில் மட்டக்குளியைச் சேர்ந்த பாத்திமா றினோசாவின் ஜனாஸா எரிக்கப்பட்டமை தொடர்பில் அவரது கணவர் பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணல்
"எனது குடும்பத்தில் நடந்ததைப் போன்று இந்த உலகில் வேறு எங்கும் நடக்கக்கூடாது" என உலகை விட்டுப் பிரிந்த தனது மனைவியான 44 வயதுடைய பாத்திமா ரினோசாவைப் பற்றி முஹம்மத் சபீக் கூறியது பெரும் கவலைகளை தன்னகத்தே சுமந்தவாறாகும்.
51 வயதுடைய அவர் 6 பிள்ளைகளின் தந்தையாவார். கொழும்பு 15 ஐச் சேர்ந்த 52 வயதுடைய கொரோனாவால் பிடிக்கப்பட்டு மரணித்த பெண் பற்றிய தகவலுக்கு பின்னர் மரணித்ததாக தகவல் வழங்கப்பட்டது எனது மனைவியின் இறப்பை பற்றியதாகும்.
"மனிதர்கள் அதிகமாக பொய் சொல்கிறார்கள். ஊடகங்கள் அனைத்தும் பொய்யையே கூறின பாத்திமா ரினோஷா இறந்தது கொரோனா வைரஸ் பிடிப்பினால் தான் என்பது பற்றி அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அவர்கள் நோய்த்தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தையே வெளிப்படுத்தினார்கள். எனினும் அதற்கு அடுத்த நாளே அவரது உடல் எரிக்கப்பட்டது. எனது மனைவிக்கு கொரோனா இல்லை. அவருக்கு இல்லை என்று அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
அவர் பாத்திமா ரினோசாவை திருமணம் முடித்தது இன்றைக்கு 28 வருடங்களுக்கு முன்னராகும். "நாங்கள் தேனீர் குடிப்பதும் ஒரே கோப்பையில். சாப்பிடுவதும் ஒரே தட்டில்.
அவருக்கு கொரோனா இருந்திருந்தால் இப்பொழுது எனக்கும் தான் இருந்திருக்க வேண்டும். எங்கள் எவருக்கும் கொரோனா இல்லை. எங்கள் ஊரில் கூட எவருக்கும் இல்லை."
எனினும் வீட்டில் இருந்தவாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அவர்களுக்கு அறிவித்த வழங்கப்பட்டிருந்தது. "எனக்கு எந்த ஒரு மொழியும் தெரியாது. நான் கற்ற ஒருவர் அல்ல. நான் முச்சக்கரவண்டி ஓட்டுனராக இருக்கிறேன்.
அதன் உரிமையாளருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் வழங்குகிறேன். மக்கள் எந்த அளவுக்கு பொய் கூறுகிறார்கள் என்றால், நான் பாண் வியாபாரி என்றும் நான் கொரோனாவைப் பரப்புகிறேன் என்றும் கூறினார்கள்."
அவர் மீண்டும் அழுதார். அவர் கூறுகின்ற வகையில், பாத்திமா ரினோஷா கொழும்பு IDH வைத்தியசாலைக்கு அமைக்கப்பட்டிருப்பது இருமல் மற்றும் சளி வருத்தம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னராகும்.
"நாய்கள் போன்ற பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்றார்கள்." அவரது வீட்டுக்கு வருகை தந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் 10 நிமிடங்களுக்கு அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றி அனைத்து பொருட்களுக்கும் மருந்து அடித்து அவர்களுக்கு எந்த ஒரு விடயம் பற்றியும் விளக்கம் அளிக்காமலாகும்.
"எங்களுக்கு எதுவும் கூறவில்லை. எங்களை வெளியே அமர்த்தி எங்கள் வாயில் ஒன்றை போட்டுப் பார்த்தார்கள். மூக்கினுள் எதையோ செலுத்திப் பார்த்தார்கள். அதன் பின்னர் நாய்கள் போன்று பஸ் ஒன்றில் ஏற்றிச் சென்றார்கள்."
சபீக் அழுதவாறு தடுமாற்றத்துடனேயே தகவல் அளித்தா ர்.அவருடன் தகவல் பரிமாறிக் கொண்டிருந்த அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, "தீவிரவாதிகளை போன்று அவர்களை கவனித்து இருந்திருக்கிறார்கள்." எனக் கூறினார்."
இராணுவர்கள் நன்றாக கவனித்தார்கள். "வெலிக்கந்தை ராணுவ முகாமில் உள்ள ராணுவத்தினர் மிக நன்றாக அவர்களை கவனித்தார்கள் எனத் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தமது மதக் கடமைகளை நிறைவேற்ற வீட்டையும் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
அதற்கு அடுத்த நாள் காலை உணவின் பின்னர் அவர்களுக்கு அதிரடி தகவல் ஒன்று கிடைத்தது. பகல் உணவை உண்டு விட்டு "மறுபடியும் செல்லத் தயாராகுங்கள்." என அறிவிக்கப்பட்டது.
அவரை மறுபடியும் வருகை தந்ததன் பின்னர் அவர்கள் 2 வாரங்கள் வீட்டில் இருந்து வெளியேறாமல் சுய தனிமைப்படுத்தலலில் ஈடுபடுமாறு பிரதேச பொலிசாரினால் அறிவித்தல் கிடைத்தது. இன்னும் அவர்களுக்கு வீட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. ரினோசாவின் மரண அறிவித்தல் கிடைத்தது. அவர்கள் இந்த நிலையில் இருக்கும்போது ஆகும்.
அவர் மரணித்தது கொரோனாவினால் தானா என்பது பற்றி சந்தேகம் இருப்பதால் குடும்ப அங்கத்தவர்களுக்கு அவரது உடலை வழங்க முடியாது என தெரிவித்த அதிகாரிகள் வைத்திய சாலைக்கு வந்து இறுதி அறிக்கையை செய்வதற்காக எனது கடைசி மகனுக்கும் அவரது நண்பரான மௌலவி ஒருவருக்கும் அனுமதி வழங்கினார்கள்.
அவர்கள் அங்கே செல்லும் போது அவரது உடல் கொரோனா நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ஒருவரது உடலை சீல் வைப்பது போன்று வைக்கப்பட்டிருவில்லை. IDH இனால் எங்களுக்கு நோயை கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறினார்கள்.
அவர் கூறி உடலை பார்க்க விட்டுவிட்டு அவசர சிகிச்சை பிரிவுக்குச் செல்லவிட்டார்கள். ஆனாலும் மகனுக்கு செருப்பை கழற்றுமாறு கூடக் கூறவில்லை. உடலை வெட்டிப் பார்க்க வேண்டும் எனக் கூறினார்களாம். கொரோனா இருந்திருந்தால் உடலை ஏன் வெட்ட வேண்டும் என மகன் கூறுகின்றார்.
மகன் தாயின் உடலை பார்த்து அடையாளப்படுத்தி விட்டு அதனை ஒரு புகைப்படம் கூட எடுத்திருந்தார். தாயின் கண்களில் கண்ணீர் இருந்ததாக கூறுகின்றார். "நான் கற்ற ஒருவரல்ல. ஆனாலும் எனது மனைவிக்கு கொரோனா இருந்திருந்தால்
ஏன் அவரது முகத்தை பார்க்க விட்டிருக்க வேண்டும்?" என சபீக் கேள்வி எழுப்புகிறார்.
விருப்பம் இல்லாமல் இருந்தாலும் உருவாகி இருக்கும் சூழ்நிலையில் அவரது மகன் உடலை அழிப்பதற்கான படிவங்களில் கையெழுத்திட்டிருந்தார். அதன் பின்னர் "அவர்கள் எங்களுக்கு எதுவுமே கூறாமல் எடுத்துவிட்டார்கள்."என சஃபி கூறினார்.
எனினும் ஊடகவியலாளர் மரியம் அஸ்வரின் ட்விட்டர் தகவலின் படி சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்ட covid-19 இனால் இறந்தவர்களின் எண்ணிக்கைகளுள் இவரது மரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சிங்களத்தில்:சரோஜ் பதிரன
தமிழில்:அப்ரா அன்ஸார்
Comments (0)
Facebook Comments (0)