கிழக்கு மாகாணத்தின் கல்வியை முழுக்க முழக்க அழித்தவர் தான் திசாநாயக்க: சுற்றாடல் அமைச்சர்
கிழக்கு மாகாணத்தின் கல்வியை முழுக்க முழக்க அழித்தவர் தான் தற்போதைய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியூ.ஜீ. திசாநாயக்கவே என சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் குற்றஞ்சாட்டினார்.
நான் முதலமைச்சராக இருந்த காலப் பகுதியில் தற்போதுள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திஸாநாயாக்காவை இரவோடு இரவாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து மாற்றினேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
"அவரின் இந்த நடவடிக்கைகளுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடம் கொடுக்கக் கூடாது. காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியை இடமாற்றியது முதலாவது பிழை. இரண்டாவது தகுதியான ஒரு பாடசாலையைக் அவருக்கு கொடுத்திருக்கலாம்.
இங்கிருக்கின்றவர்களை விட தகுதியான ஒரு கல்வி அதிகாரியே கலாவுதீனாகும். அப்படியான ஒருவரை எப்படி இடமாற்றுவீர்கள். அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது" எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)