மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து எகிப்து தூதுவருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
மத்திய கிழக்கு வலயத்தின் தற்போதைய நிலைமை குறித்து எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிமுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (27) வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாக காணப்படும் நட்புறவை பலப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே, கொழும்பிலுள்ள எகிப்து தூதரகத்தின் ஆலோசகர் மொஹமட் மாதி ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)