சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின நிகழ்வு
சவூதி அரேபியாவின் ஸ்தாபகர் தின நிகழ்வு கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வெளிவிகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திரிகள் எனப் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
சவூதி அரசின் ஆரம்ப வரலாற்றையும், பண்பாட்டு பெருமையையும் முன்னிறுத்தி சவூதி அரேபிய ஸ்தாபக தினம் பெப்ரவரி 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை மற்றும் சவூதி அரேபிய ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர நட்பறவு ஆரம்பமாகி 50 வருடங்கள் இந்த வருடம் நிறைவடைகின்றது.
Comments (0)
Facebook Comments (0)