கொழும்பில் இடம்பெற்ற குவைத் சுதந்திர தின நிகழ்வு

கொழும்பில் இடம்பெற்ற குவைத் சுதந்திர தின நிகழ்வு

குவைத் இராச்சியத்தின் 64ஆவது சுதந்திர தினம் மற்றும் சுயாதீன நாடாக செயல்பட ஆரம்பித்து 34 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தினால் கடந்த திங்கட்கிழமை (24) வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திரிகள் எனப் பலர் பங்கேற்றனர்.