ஆயுர்வேதம், யுனானி, சித்த துறைகளில் உயர் கல்வியினை இந்தியாவில் மேற்கொள்ள புலமைப்பரிசில்

ஆயுர்வேதம், யுனானி, சித்த துறைகளில்  உயர் கல்வியினை இந்தியாவில்  மேற்கொள்ள புலமைப்பரிசில்

ஆயுஷ் புலமைப்பரிசில் திட்டத்தின்கீழ் 2022/23 கல்வியாண்டில் ஆயுர்வேதம், யோகா,
யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு/ பட்டப்பின் படிப்பு/ கலாநிதி ஆகிய கற்கை நெறிகளை தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளுக்கு, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் புலமைப் பரிசில்களை அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் திறமைவாய்ந்த இலங்கை பிரஜைகளை தெரிவு செய்து இந்திய அரசாங்கம் இப்புலமைப்பரிசில்களை வழங்குகிறது. இப்புலமைப்பரிசில் திட்டங்கள் முழுமையான கற்கைநெறி கட்டணம் மற்றும் கற்கைநெறிக் காலம் முழுவதற்குமான மாதாந்த செலவின கொடுப்பனவுகள் அனைத்தையும் உள்ளடக்கியதுடன், இதற்காக தங்குமிட கொடுப்பனவு, வருடாந்த உதவித்தொகை மற்றும் சுகாதார நலன்புரி சேவைகள் போன்றவையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk இணையதளத்தில் காணமுடியும். இதற்கான விண்ணப்பங்களை ICCR A2A தளம் ஊடாக பதிவேற்றம் செய்வதற்கான இறுதி திகதியான ஜூலை 15ற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்புகொள்ளலாம்

E-mail- eduwing.colombo@mea.gov.in
Phone - 0112421605, 0112422788 ext-605