நாட்டை முழுமையாக முடக்குவது தொடர்பில் தீர்மானம் இல்லை: இராணுவத் தளபதி
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர தெரிவித்தார்.
இந்த நடைமுறை தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றதாகவும் தேவையான விடயதானங்களை சுகாதாரப் பிரிவினருடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டை முடக்குவதாக வதந்திகள் பரவுகின்றதாகவும் இதுவரை அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டிய இராணுவத் தளபதி, எதிர்வரும் நாட்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தகுந்த நடவடிக்கைகள், சுகாதார தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
Comments (0)
Facebook Comments (0)