வெளிநாட்டு பல்கலைகளின் பட்டங்களை UGC உறுதிப்படுத்தாது
அஸ்லம் எஸ். மௌலானா
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்களின் செல்லுபடித்தன்மை பற்றி இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எவ்வித உறுதிப்படுத்தலையும் வழங்காது என தகவலறியும் சட்டத்திற்கமைய தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பை தொடர விரும்பும் இலங்கை மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
இதன்போது சர்வதேச மற்றும் பொதுநலவாய மட்டத்தில் செயற்படும் பல்கலைக் கழகங்களின் விவரங்கள் உறுதிப்படுத்தப்படும். எவ்வாறாயினும் அப்பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பாடங்களின் செல்லுபடித்தன்மை பற்றிய
உறுதிப்படுத்தல்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கமாட்டாது
என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட வினாவுக்கு பதிலளிக்கையிலேயே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இவ்வாறு தெரிவித்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)