'பொதுபலசேனாவினை தடை செய்ய எந்த நடவடிக்கையுமில்லை'
பொதுபலசேனா அமைப்பினை தடை செய்யுமாறு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையினை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவினால் எந்தவித சிபாரிசும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் இன்று (13) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையினை விரிவாக ஆராய்ந்த அமைச்சரவை உப குழு, பொதுபலசேனா அமைப்பினை தடை செய்யுமாறு எந்தவித சிபாரிசினையும் முன்மொழியவில்லை என குறித்த அமைச்சரவை உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
ஈஸ்டர் தற்கொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே குறித்த அமைப்பினை தடை செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் ஏனைய சட்ட அமுலாக்கல் துறையினர் ஆணைக்குழுவின் அறிக்கையினை மதிப்பீடு செய்வதாகவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் இறுதி முடிவினை அமைச்சரவை உப காத்துக்கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையிலேயே பொதுபலசேனா அமைப்பினை தடை செய்வதா இல்லது என்பது தொடர்பான இறுதி தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் குறிப்பிட்டார். vidiyal.lk
Comments (0)
Facebook Comments (0)