இலங்கையின் ஒப்பற்ற ஷொப்பிங் அனுபவம் Havelock City Mall

இலங்கையின் ஒப்பற்ற ஷொப்பிங் அனுபவம் Havelock City Mall

இலங்கையின் புத்தம் புதிய நவீனத்துவம்மிகு வர்த்தக புகலிடமாக திகழ உள்ள ஹேவலொக் சிட்டி மோல்,  2023 ஆகஸ்ட் இல் அதன் கதவுகளைத் திறக்கும் போது திகைப்பில் மூழ்கிட தயாராகுங்கள்.

கொழும்பின் மைய பகுதியில், உலகத் தரம் வாய்ந்த ஷொப்பிங் அனுபவம் உங்களை உற்சாகத்தில் திணறச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

ஹேவ்லொக் சிட்டியின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த மோல், இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் புதுமையான விடயங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கலப்பு-பயன்பாட்டு திட்டமாகும்.

இது உலக வர்த்தக மையத்தின் உரிமையாளர், முகாமையாளர் மற்றும் மேம்பாட்டாளரான ஓவர்சீஸ் ரியாலிட்டி (சிலோன்) பிஎல்சியால் உருவாக்கப்பட்டுள்ளது.

200,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்து கிடக்கும் ஹேவ்லொக் சிட்டி மோல் ஓர் சொர்க்கமாகும், இதில் ODEL, Cargills Food Hall, Scope Cinema, Food Studio, Cool Planet & Abans உள்ளிட்ட ஆறு முதன்மையான வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளன.

அதற்கு மேலதிகமாக, 132 விற்பனை நிலையங்கள், ஃபேஷன் அணிகலன்கள், பொழுதுபோக்குகள், உணவு மற்றும் பானங்கள், வசதியான சேவைகள், மின்னியல், வீட்டுப்பொருட்களுடன் இணையற்ற தெரிவுகளையும் வழங்குகின்றன.

பல்வகையான உணவு வகைகளை சுவை பார்த்திட நினைக்கும் உணவு பிரியர்களுக்கு, ஹேவ்லொக் சிட்டி மோலில் உள்ள விருப்பத் தெரிவுகள் சுவை அனுபவத்தினை  அள்ளி வழங்கிடும். 30 இற்கும் மேற்பட்ட சிறப்பு உணவகங்கள், வசதியான கஃபேக்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பார்கள் ஆகியவற்றின் வரிசையால் திறமையாக வடிவமைக்கப்பட்டுள்ள உலகளாவிய உணவு வகைகளையும்  நமது நாட்டு பாரம்பரிய உணவுகளையும் ஒன்றிணைக்கும் ஃபுட் கோட் (food Court) வழியாக உங்களின் சுவை பயணத்தை தொடங்கிட முடியும்.

ஹேவ்லொக் சிட்டி மோல் அதன் அற்புதமான பொழுதுபோக்கு வரிசையையும் உங்களுக்காக வழங்க காத்திருக்கின்றது. இலங்கையில் முதல் மற்றும் ஒரே பிரீமியம், பாரிய வடிவிலமைந்த IMAX சினிமாவுடன் 1,000 இருக்கைகள், ஆறு திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் மூலம் வசீகரிக்க தயாராகின்றது. 

சிறார்களுக்கான, வெட் ரூ வைல்ட் சாகச வலயம்; மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தினை வழங்கிட உறுதியளிப்பதோடு,  ஜங்கிள் வலயம்; அவர்களின் சாகச குறும்புகளுக்கு விருந்தளிக்க, நீர்வாழ் சாகசங்களை விரும்புவோருக்கு, ஓசன் மண்டலம் நீர் விளையாட்டு நடவடிக்கைகளின் வரிசையையும் வழங்குகிறது.

கேமிங் ரசிகர்கள் முழு குடும்பத்திற்கும் ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் வேர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) கேம்களை வழங்கும் கேமிங் ஆர்கேட் மூலம் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

இது தொடர்பில் Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி / பணிப்பாளர் பிரவீர் சமரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

"கடந்த மூன்று வருடங்கள் சவாலானவை, ஆனால் தொற்றுநோய் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சவால்களை நாங்கள் வெற்றிகொண்டுள்ளோம். இன்று, நாங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் வலுவாக நிற்கிறோம்.

எங்கள் மோல் எங்களைச் சிறப்பிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருப்பதாக நாங்கள் நம்புவதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதன் சிறந்த அபிவிருத்தி செயற்பாடு, சரியான அளவு, மைய இருப்பிடம் மற்றும் சர்வதேச மற்றும் உள்ளூர் வர்த்தகநாமங்களின் தொகுப்பு ஆகியவற்றுடன் அமைந்த அதிநவீன மோல் முழு குடும்பத்திற்கும் ஷொப்பிங் செய்ய மகிழ்ச்சியான இடமாக அமையும்" எனக் கூறினார்.

15 நிமிட பயணத்தில் 180,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு, அதன் மைய இருப்பிடம் வசதியின் மையமாக உள்ளது. ஹெவ்லொக் சிட்டியின் 1,000 ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மிரேகா டவர் ஆகியவற்றிலிருந்து இது ஒரு படி மட்டுமே தொலைவில் உள்ளது.

இது கிட்டத்தட்ட 6,000 அலுவலக ஊழியர்களுக்கு வதிவிடமாக அமையும். இந்த இணையற்ற அணுகல்தன்மை, கொழும்பு 3, 4, 5, மற்றும் 6 ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் மற்றும் தெஹிவளை, கல்கிசை, நுகேகொடை, மஹரகம, கொட்டாவ, கிருலப்பனை, நாரஹேன்பிட்டி, இராஜகிரிய, நாவலை, கோட்டே மற்றும் அதற்கு அப்பால் உள்ளவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் திளைக்க செய்யும் அதிசயங்களை வழங்கும் என்பதில் ஐயமில்லை.