அம்பகமுவலில் தூய நீர் விநியோக கட்டமைப்பை நிறுவ ஜப்பான் நிதியுதவி
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவில் தூய நீர் விநியோகக் கட்டமைப்பை நிறுவுவதற்கு 63,197 அமெரிக்க டொலர்களை (சுமார் 12 மில்லியன் ரூபாய்) வழங்க ஜப்பானிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) ஊடாக வழங்கப்படவுள்ள இந்த நன்கொடைக்கான ஒப்பந்தத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் Adventist Development and Relief Agency (ADRA) ஸ்ரீலங்காவின் பணிப்பாளர் (இடைக்கால) டபிள்யூ.எம்.பி.ஆர் பண்டாரதிலக ஆகியோர் அண்மையில் கைச்சாத்திட்டனர்.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த சமூகத்தாருக்கு தூய நீர் விநியோகம் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் ADRA ஸ்ரீலங்கா பல வருட காலமாக ஈடுபட்டுள்ளது. தேயிலை பெருந்தோட்ட பகுதியில், ஸ்டரத்ஸ்பே பெருந்தோட்டத்தில் மின்னா பிரிவு பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகமாக அமைந்துள்ளது.
அருகாமையிலுள்ள சமூகத்தாருக்கும் அதன் வசிப்போருக்கும் தூய நீர் வசதியை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இந்தப் பகுதியில் காணப்படும் ஒரே நீர் நிலையாக, ஏனைய கிராமங்களினூடாக பாய்ந்தோடும் இயற்கை நீரோடை அமைந்துள்ளதுடன், பழைய நீர் தாங்கியும் காணப்படுகின்றது. இவை இரண்டுமே தூய்மையற்றதாகவும் முழுச் சமூகத்தின் தேவைக்கும் சேவையாற்ற முடியாததாகவும் அமைந்துள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக பெருந்தோட்ட சமூகத்தில் நீர் விநியோகம் மற்றும் சுகாதாரச் சூழலை மேம்படுத்தப்படும் என்பதுடன், இந்தப் பிரிவைச் சேர்ந்த சகல அங்கத்தவர்களுக்கும் தூய வடிகட்டிய நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலத்துக்கு பங்களிப்பு வழங்குவதாக இந்தத் திட்டம் அமை்நதிருக்கும். சமூகத்துக்கான தினசரி சுகாதார செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகளும், அம்பகமுவ பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 750 பேருக்கு வழங்கப்படும்.
இந்த நன்கொடையை பெற்றுக் கொண்டதன் பின்னர் பண்டாரதிலக கருத்துத் தெரிவிக்கையில்:
'ஜப்பானிய தூதரகத்துடன் பணியாற்றுவது உண்மையில் மகிழ்ச்சியூட்டும் அனுபவமாக அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில், யுனுசுயு இனால் இவ்வாறான இரு நீர்க் கட்டமைப்புகள் அப்கொட், அல்டன் எஸ்டேட் பகுதிக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கும் புபுP நிகழ்ச்சியினூடாக நிதியளிக்கப்பட்டிருந்தது. ஜப்பானியர்களுடனான முன்னெடுக்கப்படும் பங்காண்மை என்பது எப்போதும் பெறுமதி வாய்ந்தது. இந்தத் திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு பெருந்தோட்ட முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசாங்கத் தரப்பினரிடமிருந்து எமக்கு பெருமளவு உதவிகள் கிடைத்திருந்தன.
அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். உயர் மட்ட பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றினூடாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதை யுனுசுயு உறுதி செய்யும் என்பதுடன், சமூகத்தார் மத்தியில் உறுதியான உரிமையாண்மையை ஊக்குவிக்கும். ஒன்றிணைந்து செயலாற்றுவதில் இலங்கையும் ஜப்பானும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இந்த நீண்ட கால நட்பில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். ஜப்பானிய மக்கள் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்' என்றார்.
Comments (0)
Facebook Comments (0)