கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவி

கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவி

வெடிப்பொருட்கள் அபாயங்களை அகற்றுவதற்கு மேற்கொளள்ப்படும் கடினமானதும் அதி ஜாக்கிரதையுடையதுமான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கும் நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் பெண்கள் அணியொன்றுடன் உரையாடுவதற்கும் இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் மார்ட்டின் கெலி கடந்த மார்ச் 8 ஆம் திகதி Mines Advisory Group (MAG) இன் நிலக்கண்ணிவெடி அகற்றல் தளமொன்றுக்கு விஜயம் செய்தார்.

நிலக்கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா இந்த நிதியாண்டில் வழங்கும் ஒரு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் (5.5 மில்லியன் அமெரிக்க டொலர்) அதிகமான தொகையின் பகுதியொன்றாக இருக்கும் இந்த திட்டமானது உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது.       

"உயிராபத்தான இந்த சாதனங்களை அகற்றுவதற்கு திறமையும் பொறுமையும் மற்றும் துணிச்சலும் அவசியம்", என்று பிரதித் தூதுவர் கெலி தெரிவித்தார்.

"தங்களது சமூகங்களை மீள கட்டியெழுப்புவதில் துணிச்சலான சேவையொன்றை மேற்கொள்ளும் அதேநேரம், ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட பாலின பாத்திரங்களின் மாறா நிலைகளை நிலக்கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் இந்த பெண்கள் எதிர்த்து நிற்கின்றனர்.

நிலக்கண்ணிவெடி அற்ற தேசமாக உருவாவதற்கு இலங்கைக்கு உதவுவதற்கான அவர்களது பங்களிப்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்", என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஒற்றுமைக்கான டெல்வன் அமைப்பு (Delvon Association for Social Harmony - DASH), Skavita மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண திட்டம் (Skavita Humanitarian Assistance and Relief Project - SHARP), HALO Trust மற்றும் MAG உட்பட அமெரிக்க நிதியளிப்பின் உதவியுடன் நிலக்கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலக்கண்ணிவெடி அகற்றல் பங்காளர்களின் பிரதிநிதிகளை பிரதித் தூதுவர் கெலி சந்தித்தார்.

அத்துடன், கிளிநொச்சியிலுள்ள பிராந்திய நிலக்கண்ணிவெடி நடவடிக்கை அலுவலகத்தில் Regional Mine Action Office) தேசிய நிலக்கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்துடன் (National Mine Action Center) நேர்மறையானதும் ஆக்கப்பூர்வமானதுமான சந்திப்பொன்றையும் அவர் நடத்தினார்.  

நடவடிக்கைகளை மற்றும் உபகரணங்களுக்கு 78 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை வழங்கி, இலங்கையில் மனிதாபிமான நிலக்கண்ணிவெடி அகற்றலுக்கான மிகப் பெரிய கொடையாளராக 1995 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்கா இருந்து வருகிறது.

நிலக்கண்ணிவெடி மாசுபாடட்hல் பாதிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் அகற்றல் முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்கு அமெரிக்கா உதவியுள்ளதுடன், 2017ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தை நிலக்கண்ணிவெடி தாக்கமற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்துவதை சாத்தியமாக்கிய முயற்சிகளுக்கும் உதவி செய்தது.

அமெரிக்க நிதியளிப்பு இலங்கை இராணுவத்துககு; நிலக்கண்ணிவெடி கண்டறிதல் பயிற்சியளிப்புக்கு உதவியுள்ளதுடன், நிலக்கண்ணிவெடி அகற்றல் உபகரணங்களையும் வழங்கியுள்ளது.