பாணமயில் நில அபகரிப்பு; சஜித் பிரேமதாஸ நேரடி விஜயம்
நாட்டில் ஒரு புதிய வகை நில அபகரிப்பு நடைபெற்று வருவதாகவும், பாணம பிரதேசம் அதற்கு பலியாகிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் நில அபகரிப்பு குறித்து கேள்விப்பட்டவுடன் அது தொடர்பாக ஆராய பாணமவில் உள்ள ஸ்ரீ போதிருக்காராமயவுக்கு சமூகமளித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
ஊவா வெல்லஸ்ஸ சங்கத்தின் இருபிரிவினதும் பிரதம தலைமை தேரர் சங்கைக்குரிய பாணம ஸ்ரீ சந்திரரத்ன தேரரையும் இன்று (27) சந்தித்து ஆசியைப் பெற்றதோடு அங்கு சமூகமளித்திருந்த கிராமவாசிகளை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் உள்நாட்டு வளங்களை துட்சமாக மதித்து வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கம், மறுபுறம் அப்பாவி பொதுமக்களின் நிலங்களை சூறையாடுவதையும் ஊக்குவிப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் அதிகாரம் இருப்பதற்காக, பணத்திற்காக யாரும் இந்த நிலங்களை கொள்ளையடிக்க அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் நாட்டை ஒரு மோசமான நிலைக்கு தள்ளுகிறது என்றும், காட்டுச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் இந்த கொள்ளைக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)