அஷ்ரப் நகரில் காட்டு யானைகள் அட்டகாசம்
ஒலுவில், அஷ்ரப் நகர் கிராமத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அக்கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக்கிராமத்திற்கு அண்டிய பள்ளக்காடு பிரதேசத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் குப்பைகள் கொண்டப்படுகின்றன.
இந்த குப்பையிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உண்ணுகின்றமையினால் சுமார் 20க்கு மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த குப்பை மேட்டுக்கு யானை வருவதனை தடுக்கும் வகையில் பாரிய அகழி தோண்டப்பட்டுள்ளது. இதனால் குறித்த குப்பை மேட்டினை நோக்கி வரும் யானைகள் அங்கு செல்ல முடியாதுள்ளது.
இதனால், குறித்த யானைகள் அஷ்ரப் நகர் கிராமத்தில் புகுந்து பாரிய அட்டகாசம் மேற்கொள்கின்றன.
இதன் காரணமாக அக்கிராம மக்களினால் மேற்கொள்ளப்படும் கச்சான் மற்றும் சோளம் போன்ற சேதனப் பயிர்களுக்கு பாரிய சேதம் விளைக்கப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)