விமல், கம்மன்பில பதவி நீக்கம்; SBக்கு அமைச்சர் பதவி
பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, பல அமைச்சுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
எரிசக்தி அமைச்சராக காமினி லொகுகேயும், மின்சக்தி அமைச்சராகப் பவித்ராதேவி வன்னியாரச்சியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இதேவேளை, கைத்தொழில் அமைச்சராகப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில், பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
Comments (0)
Facebook Comments (0)