ஜுனில் மாகாண சபை தேர்தல்?
எதிர்வரும் ஜுன் மாதம் மாகாண சபை தேர்தலை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமயிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கு நிலையில், மாகாண சபை தேர்தலுக்கு தயாராகுமாறு இதன்போது ஜனாதிபதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது
1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 9 மாகாண சபைகளும் தற்போது மாகாண ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றன.
தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் மாத்திரமே தேர்தலi நடத்த முடியும்.
சன்டே டைம்ஸ்
Comments (0)
Facebook Comments (0)