இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராக காலீத் நாசீர் அல் அமீரி நியமனம்
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக காலீத் நாசீர் அல் அமீரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம், ஐக்கிய அரபு இராச்சியத்தின் உப ஜனாதிபதியும், டுபாயின் பிரதரும் ஆட்சியாளருமான ஷேக் முகம்மத் பின் ராசீத் அல் மக்தூமினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர், கொழும்பிலுள்ள ஐக்கிய அரபு இராச்சிய தூதுவராலயத்தில் மிக விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக சுமார் இரண்டு வருடங்கள் கடமையாற்றிய அஹமட் அலி அல் முல்லா கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் தனது சேவையினை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பினார்.
இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்க்கது.
Comments (0)
Facebook Comments (0)