எயார் பஸ் விமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரும் இலங்கையின் தீர்மானத்தை TISL வரவேற்பு

எயார் பஸ் விமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கோரும் இலங்கையின் தீர்மானத்தை TISL வரவேற்பு
  • ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் எயார் பஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு கோரவுள்ளது.
  • உள்நாட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பொறுப்புக் கூறலுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக  TISL  கரிசணை கொண்டுள்ளது.
  • சம்பவம் குறித்து பிரித்தானியாவிலுள்ள SFO நிறுவனத்துடன் TISL  தொடர்பாடல்களில் ஈடுபட்டுள்ளது.
  • குற்றச் செயல்களின் வரும்படிகள் பற்றிய சட்டத்தை (Proceeds of Crime Law) அறிமுகப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு TISL கோரிக்கை விடுக்கின்றது.

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்தமை, செலவுகள் மற்றும் வட்டி ஆகியவற்லற திருப்பிச் செலுத்துதல் உட்பட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டிலன எயார் பஸ் எஸ்.ஈ. நிறுவனத்திடமிருந்து கோருவதற்கு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேலவகள் நிறுவனம் தீர்மானித்துள்ளதை ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது வரவேற்கின்றது.

அதேநேரம் யு350 - 900 ரக நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கும், ஏற்கனவே செலுத்தப்பட்ட முற்பணம் 19 மில்லியன் அமெரிக்க டொலரையும் திருப்பிச் செலுத்துமாறும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேலவகள் நிறுவனம் கோரியுள்ளது.

இலங்கை உட்பட பல நாடுகளில் எயார்பஸ் எஸ்.ஈ. நிறுவனமானது அரச அதிகாரிகள் பலருக்கும் இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பாக, பிரித்தானியாவிலுள்ள தீவிர மோசடிகளைக் கண்காணிக்கும் அலுவலகம் மற்றும் எயார் பஸ் எஸ்.ஈ. ஆகியவற்றுக்கு இடையில் ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒப்பந்தத்தின் மூலம் வெளியான தகவல்களின் அடிப்படையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

எயார்பஸ் நிறுவனம் மீது வழக்குத் தொடர்வதற்கு ஸ்ரீPலங்கன் எயார்லலன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை பாராட்டும் அதேவேளை, இலங்கையில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவளிகள் தொடர்பில் உள்நாட்டில் பொறுப்புக்கூறும் வகையிலான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் சுட்டிக்காட்டுகின்றது.   

இந்த சம்பவத்தின் மூலம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க இழப்புகளுக்குக் காரணமானவர்களை கருத்திற்கொண்டு அதிகாரிகள் தகுந்த நடவடிககை எடுக்க வேண்டும் என்றும் ட்ரான்ஸ்பேரன்ஷி இன்டர்நெஷனல் தொடர்ந்து வலியுறுத்துகின்றது.

அத்துடன் அண்ணளவாக 98 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 19 பில்லியன் ரூபா) இழப்பு வழங்க வேண்டும். அத்துடன் தொற்று நோய் பரவலால் பாரிய பொருளாதார இழப்பை சந்தித்துள்ள தற்போதைய  சூழ்நிலையில், அந்த தொகையைக் கொண்டு 24.5 மில்லியன் கொவிட் தடுப்பு மருந்துகளை நாட்டிற்கு கொள்வனவு செய்ய முடியும்.

2020 மார்ச் மாதமளவில் பிரித்தானியாவிலுள்ள தீவிர மோசடிகளைக் கண்காணிக்கும் அலுவலகத்திற்கு (SFO), ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக TISL நிறுவனமானது, ஒப்பந்தத்தின் விசாரணை மற்றும் பேச்சுவார்த்தைகளின் போது, “இலஞ்சம், ஊழல் மற்றும் பொருளாதார குற்றவியல்களால் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு (பாதிக்கப்பட்ட நாடுகள் உட்பட) இழப்பை ஈடுசெய்யும் பொதுக் கோட்பாடுகள் தொடர்பாக சரியான முறையில் கவனம் செலுத்தப்பட்டதா என கடிதம் மூலம் கோரியிருந்தது.

இவ்வாறான 5 சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு 42.9 மில்லியன் பவுண் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொடுப்பதற்காக தீவிர மோகடிகளைக் கண்காணிக்கும் அலுவலகம் (SFO), பிரித்தானியாவின் தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) மற்றும் அரச வழக்கு விசாரணை சேவை (CPS) இணைந்து பணியாற்றியுள்ளதாகவும் TISL நிறுவனமானது மேலும் சுட்டிக்காட்டுகின்றது.

2020 ஜுன் மாதம் TISL ற்கு கடிதம் மூலம் பதிலளித்திருந்த SFO அலுவலகமானது, இழப்பீடுகளின் பெறுமானத்தை அளவீடு செய்வது சவாலானது எனவும, எயார்பஸ் ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் வேறு பல காரணங்களாலும் எயார்பஸ் எஸ்.ஈ நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குதற்கான உத்தரவை வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் எயார்பஸ் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்த எந்தவொரு தயாரிப்பில் குறைபாடு உள்ளது அல்லது தேவையற்றவை என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லையென மேலும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக SFO சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சூழ்நிலையின் அடிப்படையிலேயே, எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் நிறுவனம் இழப்பீடு கோருவதற்கான நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும், மீட்கப்பட்ட சொத்துகளை நிர்வகிப்பதற்கான விரிவான சட்ட கட்டமைப்பு இலங்கையில் இல்லை என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் (UNCAC) கைச்சாத்திட்டுள்ள ஒரு தரப்பாக, குற்றத்தினால் வரவேண்டிய வருமானத்தை மாற்றுவதை எதிர்த்து சர்வதேச அரங்கில் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், அத்தகைய வருமானத்தை மீட்பதற்கும் இலங்கைக்கு பொறுப்புள்ளது. இதற்கான உறுதிப்பாட்டை 2015 இல் லண்டனில் நடைபெற்ற ஊழலை தடுப்பதற்கான மாநாட்டிலும், 2017 இல் சொத்து மீட்புக்கான உலகளாவிய மன்றத்திலும் (GFAR) இலங்கை மீண்டும் வலியுறுத்தியதுடன், திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான முன்னுரிமையை அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில், திருடப்பட்ட சொத்து மீட்பு தொடர்பான கொள்கை கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிக்கு TISL பங்களிப்பு வழங்கியதுடன், இதன்மூலம் விசாரணை, அடையாளம் காணல், தடமறிதல், பறிமுதல் மற்றும் இடமாற்றம் மேற்கொள்ளல், அத்தகைய சொத்துகளை நிர்வகிப்பதற்கும் முன்மொழியப்பட்ட சட்டக் கட்டமைப்பு வழிவகுக்கின்றது.

இந்த விடயத்தில் அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விளைவாக இழக்கப்பட்ட தொகை இலஙகைக்கு மீள செலுத்தப்படுவதற்கான வாய்ப்பைக் கவனத்திற்கொண்டு, இந்த கொள்கைக் கட்டமைப்பை சட்டமாக மாற்றவேண்டியது அவசியமாகும் என்பதுடன், இதனால் மீட்பு செயன்முறையை திறம்பட நிர்வகிப்பதற்கான சூழ்நிலையும் ஏற்படலாம்.

இதேவேளை, இலங்கையில் இந்த பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் TISL கவனம் செலுத்துகின்றது.

எயார்பஸ் இலஞ்ச மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயம் தொடர்பாக பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தி நீண்டகாலமாக செயற்பட்ட நிறுவனம் என்ற வகையில், TISL, உள்நாட்டில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் வரவுத் தொகையை விரைவுபடுத்துவதற்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.