கொரோன வைரஸ் பெரிய நோயல்ல: அதாஉல்லா
கொரோன வைரஸ் மூலம் பரப்படும் COVID-19 என்பது பெரிய நோயொன்று அல்ல என தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
இது தடுமல் போன்று ஒரு புதிய நோயாகும். இந்த வைரஸ் நாங்கள் நினைப்பது போன்று பெரிய நோயல்ல என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முறையாக மருந்து கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் தடுமலை விட குறைந்தளவான, இலகுவான நோயாக இது காணப்படும் என முன்னாள் அமைச்சர் மேலும் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான தேசிய காங்கிரஸின் வேட்புமனுவினை அம்பாறை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)