‘அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?’ உஸ்தாத் மன்சூர் எழுதிய நூலின் வெளியீட்டு விழா
மிஷ்காத் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம்.மன்சூர் எழுதிய "அல்குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறதா?" எனும் தலைப்பிலான நூல் எதிர்வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி பி.ப 4.45 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் லோட்டஸ் மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
மிஷ்காத் ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில், களனி பல்கலைக்கழகத்தின் வரலாறு மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் தலைவரும் வல்பொல ராஹுல நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கல்கந்த தம்மானந்த தேரர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலி ஸப்ரி ஆகியோர் நூலாய்வினை நிகழ்த்தவுள்ளனர்.
இந்நூல் மூன்று மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)